அதிகாரம் / Chapter 24
திருக்குறள் 231
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லதுஊதியம் இல்லை உயிர்க்கு.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
புகழ்பட வாழ்தலாவது கொடுத்தல். அக்கொடையா னல்லது உயிர்க்கு இலாபம் வேறொன்றில்லை. இது புகழுண்டாமாறு கூறிற்று.
பரிமேலழகர்
ஈதல் வறியார்க்கு ஈக; இசைபட வாழ்தல்-அதனால் புகழ் உண்டாக வாழ்க; அது அல்லது உயிர்க்கு ஊதியம் இல்லை-அப்புகழ் அல்லது மக்கள் உயிர்க்குப் பயன் பிறிது ஒன்று இல்லை ஆகலான். விளக்கம் (இசைபட வாழ்தற்குக் கல்வி, ஆண்மை முதலிய பிற காரணங்களும் உளவேனும், "உணவின் பிண்டம் உண்டி முதற்று" (புறநா.18) ஆகலின், ஈதல் சிறந்தது என்பதற்கு ஞாபகமாக 'ஈதல்' என்றார். 'உயிர்க்கு என்பது, பொதுபடக் கூறினாரேனும், விலங்கு உயிர்கட்கு ஏலாமையின், மக்கள் உயிர்மேல் நின்றது.)
English explanation
See that thy life the praise of generous gifts obtain;Save this for living man exists no real gain
Give to the poor and live with praise. There is no greater profit to man than that.