அதிகாரம் / Chapter 115
திருக்குறள் 1144
கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்தவ்வென்னும் தன்மை இழந்து.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
அலரினானே அலர்தலை யுடைத்துக் காமம்; அவ்வலரில்லை யாயின் தனது தன்மை யிழந்து பொலிவழியும். செவ்வை யுடையதனைச் செவ்விது என்றாற்போலக் கவ்வையுடையதனைக் கவ்விது என்றார்.
பரிமேலழகர்
இதுவும் அது. காமம் கவ்வையாற கவ்விது - என் காமம் இவ்வூர் எடுக்கின்ற அலரானே அலர்தலை யுடைத்தாயிற்று; அது இன்றேல் தன்மை இழந்து தவ்வென்னும் - அவ்வலர் இல்லையாயின், தன் இயல்பு இழந்து சுருங்கும். விளக்கம் (அலர்தல்: மேன்மேல் மிகுதல்.செவ்வையுடையதனைச் செவ்விது என்றாற் போலக் கவ்வையுடையதனைக் 'கவ்விது' என்றார். இயல்வு: இன்பம் பயத்தல். 'தவ்வென்னும்' என்பது குறிப்பு மொழி; 'நூல்கால் யாத்த மாலை வெண்குடை, தவ்வென றசைஇத் தாழ்துளி மறைப்ப'' விளக்கம் (நெடுநல். 184-185) என்புழியும் அது.)
English explanation
The rumour rising makes my love to rise;My love would lose its power and languish otherwise
Rumour increases the violence of my passion; without it it would grow weak and waste away.