அதிகாரம் / Chapter 128
திருக்குறள் 1277
தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்முன்னம் உணர்ந்த வளை.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
குளிர்ந்த துறையையுடையவன் நம்மை நீங்கினமையை நாமறிவதற்கும் முன்னே வளைகள் அறிந்தன.
பரிமேலழகர்
இதுவும் அது. தண்ணந்துறைவன் தணந்தமை - குளிர்ந்த துறையை உடையவன் நம்மை மெய்யாற் கூடியிருந்தே மனத்தாற்பிரிந்தமையை; நம்மினும் வளைமுன்னம் உணர்ந்த - அவன் குறிப்பான் அறிதற்குரிய நம்மினும் இவ்வளகைள் முன்னே அறிந்தன. விளக்கம் (கருத்து நிகழ்ந்ததாகலின், 'தணந்தமை' என்றும், 'யான் தௌ¢ய உணர்தற்கு முன்னே தோள்கள் மெலிந்தன' என்பாள், அதனை வளைமேலேற்றி, அது தன்னை உணர்வு உடைத்தாக்கியும் கூறினாள்.)
English explanation
My severance from the lord of this cool shore,My very armlets told me long before
My bracelets have understood before me the (mental) separation of him who rules the cool seashore.