அதிகாரம் / Chapter 128

திருக்குறள் 1278

நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்எழுநாளேம் மேனி பசந்து.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

எமது காதலர் பிரிந்து நெருநற்றுச் சென்றார், யாமும் மேனி பசந்து ஏழுநாளுடையமாயினேம். இஃது அவர் பிரிவதன் முன்னும் பிரிவரென் றேங்கி இன்புற்றிலமென்று தலைமகள் கூறியது.

பரிமேலழகர்

இதுவும் அது. எம் காதலர் சென்றார் நெருநற்று - எம் காதலர் பிரிந்து போயினார் நெருநற்றே; யாமும் மேனிபசந்து எழுநாளேம் - அப்பிரிவிற்கு யாமும் மேனி பசந்து எழுநாள் உடையமாயினேம். விளக்கம் ('நெருநற்றுச் செய்த தலையளியாற் பிரிவு துணியப்பட்டது' என்பாள், 'நெருநற்றுச் சென்றார்' என்றும், அதனை ஐயுற்றுச் செல்கின்றது ஏழு நாளுண்டாகலின், அன்றே மேனி பசந்தது என்பாள், 'மேனி பசந்து எழுநாளேம்' என்றும் கூறினாள். இவ்வாற்றான் தலைமகனது பிரிதற் குறிப்பினை உணர்த்தி நின்றது.)

English explanation

My loved one left me, was it yesterday?Days seven my pallid body wastes away

It was but yesterday my lover departed (from me); and it is seven days since my complexion turned sallow.