அதிகாரம் / Chapter 128

திருக்குறள் 1279

தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கிஅஃதாண் டவள்செய் தது.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

தொடியையும் நோக்கி, மெல்லிய தோளினையும் நோக்கி, அடியையும் நோக்கி, அவள் அவ்விடத்துச் சென்ற குறிப்பு அதுவாயிருந்தது. அது - உடன்போக்கு.

பரிமேலழகர்

தலைமகள் குறிப்பறிந்த தோழி அதனைத் தலைமகற்கு அறிவித்தது. யான் அது தௌ¢வித்தவழித் தௌ¢யாது தொடி நோக்கி - 'அவா பிரிய யான் ஈண்டிருப்பின் இவை நில்லா' எனத் தன் தொடியை நோக்கி; மென்தோளும் நோக்கி' - 'அதற்கு ஏதுவாக இவை மெலியும்' எனத் தன் மென்தோள்களையும்? நோக்கி; அடி நோக்கி - பின் இவ்விரண்டும் நிகழாமல் நீர் நடந்த காத்தல் வேண்டும் எனத் தன் அடியையும் நோக்கி; ஆண்டு அவள் செய்தது அஃது. அங்ஙனம் அவள் செய்து குறிப்பு உடன் போக்காயிருந்தது. விளக்கம் (செய்த குறிப்பு - செய்தற்கு ஏதுவாய குறிப்பு. 'அஃது' என்றாள், "செறிதொடி செய்திறந்த கள்ளம்" (குறள் 1275 என்றனாகலின். பிரிதற்குறிப்புண்டாயின், அஃது அழுங்குதல் பயன்.)

English explanation

She viewed her tender arms, she viewed the armlets from them slid;She viewed her feet: all this the lady did

She looked at her bracelets, her tender shoulders, and her feet; this was what she did there (significantly).