அதிகாரம் / Chapter 45
திருக்குறள் 443
அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்பேணித் தமராக் கொளல்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
செய்தற்கரியன வெல்லாவற்றினும் அரிதே; தம்மின் முதிர்ந்த அறிவுடையாரை விரும்பித் தமக்குச் சுற்றமாகக் கொள்ளுதல். பெரியாரைக் கொளலென்பது மந்திரி புரோகிதரைக் கூட்டிக் கொள்கை.
பரிமேலழகர்
பெரியாரைப் பேணித் தமராக் கொளர் - அப்பெரியவர்களை அவர் உவர்ப்பன அறிந்து செய்து தமக்குச் சிறந்தாராகக் கொள்ளுதல்; அறியவற்றுள் எல்லாம் அரிது - அரசர்க்கு அரிய பேறுகள் எல்லாவற்றுள்ளும் பெரிது. விளக்கம் (உலகத்து அரியனவெல்லாம் பெறுதற்கு உரிய அரசர்க்கு இப்பேறு சிறந்தது என்றது, இதனான் அவையெல்லாம் உளவாதல் நோக்கி.)
English explanation
To cherish men of mighty soul, and make them all their own,Of kingly treasures rare, as rarest gift is known
To cherish great men and make them his own, is the most difficult of all difficult things.