அதிகாரம் / Chapter 45

திருக்குறள் 444

தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்வன்மையு ளெல்லாந் தலை.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

தம்மின் மிக்க அறிவுடையார் தமக்குத் தமராக ஒழுகுதல், வலியானவை யெல்லாவற்றினும் தலையான வலி.

பரிமேலழகர்

தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல் - அறிவு முதலியவற்றால் தம்மின் மிக்கார் தமக்குச் சிறந்தாராகத் தாம் அவர் வழிநின்று ஒழுகுதல்; வன்மையுள் எல்லாம் தலை - அரசர்க்கு. எல்லா வலி உடைமையினும் தலை. விளக்கம் (பொருள், படை, அரண்களான்ஆய வலியினும் இத் துணைவலி சிறந்தது என்றது, இவர் அவற்றான் நீக்கப்படாத தெய்வத்துன்பம் முதலியனவும் நீக்குதற்கு உரியர் ஆகலின்.)

English explanation

To live with men of greatness that their own excels,As cherished friends, is greatest power that with a monarch dwells

So to act as to make those men, his own, who are greater than himself is of all powers the highest.