அதிகாரம் / Chapter 45

திருக்குறள் 445

சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

அரசன் தன்னைச் சூழ்ச்சியாற் கொல்ல நினைப்பாரைத் தானுஞ் சூழ்ச்சியாற் கொல்லவல்லவனாதல் காரியமெண்ண வல்லார் தனக்குக் கண்ணாக வொழுகலான்.

பரிமேலழகர்

சூழ்வார் கண் ஆக ஒழுகலான் - தன் பாரம் அமைச்சரைக் கண்ணாகக் கொண்டு நடந்தலான்; மன்னவன் சூழ்வாரைச் சூழ்ந்து கொளல் - அரசன் அத்தன்மையராய அமைச்சரை ஆராய்ந்து தனக்குத் துணையாகக் கொள்க. விளக்கம் (இரண்டாவது விகாரத்தால் தொக்கது. தானே சூழவல்லானாயினும் அளவிறந்த தொழில்களான் ஆகுலம் எய்தும் அரசன் பாரம் அதுவே தொழிலாய அமைச்சரான் அல்லது இனிது நடவாமை பற்றி, அவரைக் கண்ணாகக் கூறினார். ஆராய்தல் -அமைச்சியலுள் சொல்லப்படும் இலக்கணத்தினர் என்பதனை ஆராய்தல். இவை மூன்று பாட்டானும் பெரியாரைத் துணைகோடலின் சிறப்புக் கூறப்பட்டது.)

English explanation

The king, since counsellors are monarch's eyes,Should counsellors select with counsel wise

As a king must use his ministers as eyes (in managing his kingdom), let him well examine their character and qualifications before he engages them.