அதிகாரம் / Chapter 8

திருக்குறள் 77

என்பி லதனை வெயில்போலக் காயுமேஅன்பி லதனை அறம்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

என்பிலாத சீவனை வெயில் சுடுமாறு போற் சுடும்: அன்பிலாதவுயிரினை அறம்.

பரிமேலழகர்

என்பு இலதனை வெயில் போலக் காயும்-என்பு இல்லாத உடம்பை வெயில் காய்ந்தாற்போலக் காயும்; அன்பு இலதனை அறம்-அன்பில்லாத உயிரை அறக்கடவுள். விளக்கம் ('என்பிலது' என்றதனான் உடம்பு என்பதூஉம், 'அன்பிலது' என்றதனான் உயிர் என்பதூஉம் பெற்றாம். வெறுப்பு இன்றி எங்கும் ஒரு தன்மைத்து ஆகிய வெயிலின்முன் என்பில்லது தன் இயல்பாற் சென்று கெடுமாறுபோல, அத்தன்மைத்து ஆகிய அறத்தின்முன் அன்பில்லது தன் இயல்பால் கெடும் என்பதாம். அதனைக் 'காயும்' என வெயில் அறங்களின் மேல் ஏற்றினார், அவற்றிற்கும் அவ்வியல்பு உண்மையின். இவ்வாறு ''அல்லவை செய்தற்கு அறம் கூற்றம்''(நான்மணிக்.83) எனப் பிறரும் கூறினார்.)

English explanation

As sun's fierce ray dries up the boneless things,So loveless beings virtue's power to nothing brings

Virtue will burn up the soul which is without love, even as the sun burns up the creature which is without bone, i.e. worms.