அதிகாரம் / Chapter 8

திருக்குறள் 76

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்மறத்திற்கும் அஃதே துணை.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

அன்பானது அறஞ்செய்வார்க்கே சார்பாமென்பர் அறியாதார். அவ்வன்பு மறஞ் செய்வார்க்குந் துணையாம்.

பரிமேலழகர்

அன்பு சார்பு அறத்திற்கே என்ப அறியார்-அன்பு துணையாவது அறத்திற்கே என்று சொல்லுவர் சிலர் அறியார்; மறத்திற்கம் அஃதே துணை-ஏனை மறத்திற்கும் அவ்வன்பே துணையாவது. விளக்கம் (ஒருவன் செய்த பகைமைப்பற்றி உள்ளத்து மறம் நிகழ்ந்துழி, அவனை நட்பாகக் கருதி அவன்மேல் அன்புசெய்ய அது நீங்குமாகலின், மறத்தை நீக்குதற்கும் துணையாம் என்பார், 'மறத்திற்கும் அஃதே துணை' என்றார்; 'துன்பத்திற்கு யாரே துணையாவார்' (குறள் 1299) என்புழிப்போல. இவை ஐந்து பாட்டானும் அன்பினது சிறப்புக் கூறப்பட்டது.)

English explanation

The unwise deem love virtue only can sustain,It also helps the man who evil would restrain

The ignorant say that love is an ally to virtue only, but it is also a help to get out of vice.