அதிகாரம் / Chapter 8
திருக்குறள் 78
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்வற்றல் மரந்தளிர்த் தற்று.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
தன்னிடத்து அன்பில்லாத உயிரினது வாழ்க்கை வலிய பாரிடத்து (பாறை) உண்டாகிய உலர்ந்த மரம் தளிர்த்தாற் போலும். தளிர்த்தற்குக் காரணமின்மையால் தளிராதென்றவாறு.
பரிமேலழகர்
அகத்து அன்பு இல்லா உயிர் வாழ்க்கை-மனத்தின்கண் அன்பு இல்லாத உயிர் இல்லறத்தோடு கூடி வாழ்தல்; வன்பாற்கண் வற்றல் மரம் தளிர்த்தற்று-வன்பாலின்கண் வற்றல் ஆகிய மரம் தளிர்த்தாற் போலும். விளக்கம் (கூடாது என்பதாம். வன்பால்-வல்நிலம். வற்றல் என்பது பால் விளங்கா அஃறினைப் படர்க்கைப் பெயர்.)
English explanation
The loveless soul, the very joys of life may know,When flowers, in barren soil, on sapless trees, shall blow
The domestic state of that man whose mind is without love is like the flourishing of a withered tree upon the parched desert.