அதிகாரம் / Chapter 65

திருக்குறள் 650

இணருழ்த்தும் நாறா மலரனையர் கற்றதுஉணர விரித்துரையா தார்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

இணராய் மலர்ந்து நாற்ற மில்லாத பூவை யொப்பர், கற்றதனைப் பிறரறிய விரித்துச் சொல்ல மாட்டாதார். இது சுருங்கச் சொல்லுதலே யன்றி வேண்டுமிடத்து விரித்துஞ்சொல்லல் வேண்டு மென்றது.

பரிமேலழகர்

கற்றது உணர விரித்து உரையாதார் - கற்றுவைத்த நூலைப் பிறரறியும் வண்ணம் விரித்துரைக்கமாட்டாதவர்; இணர் ஊழ்த்தும் நாறா மலர் அனையர் - கொத்தின்கண்ணே மலர்ந்து வைத்தும் நாறாத பூவையொப்பர். விளக்கம் [செவ்விபெற மலர்ந்து வைத்தும் நாற்றம் இல்லாதபூச் சூடப்படாதவாறு போல, நூலைக் கற்றுவைத்தும் சொல்லமாட்டாதார் நன்கு மதிக்கப்பட்டார் என்றமையின், இது தொழில் உவமம் ஆயிற்று. இவை இரண்டு பாட்டானும் அது மாட்டாதாரது இழிபு கூறப்பட்டது.]

English explanation

Like scentless flower in blooming garland boundAre men who can't their lore acquired to other's ears expound

Those who are unable to set forth their acquirements (before others) are like flowers blossoming in a cluster and yet without fragrance.