அதிகாரம் / Chapter 66
திருக்குறள் 651
துணைநலம் ஆக்கம் த்ருஉம் வினைநலம்வேண்டிய எல்லாந் தரும்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
துணைநலம் ஆக்கத்தைக் கொடுக்கும்; வினைநலம் அவ்வளவேயன்றி வேண்டிய எல்லாவற்றையும் ஒருங்கு கொடுக்கும். துணைநலம் ஆக்கங் கொடுத்தல் எல்லாரானும் அறியப் படுதலின் ஈண்டு ஏதுவாக வந்தது.
பரிமேலழகர்
துணை நலம் ஆக்கம் தரூஉம்- ஒருவனுக்குத் துணையது நன்மை செல்வம் ஒன்றனையும் கொடுக்கும்; வினை நலம் வேண்டிய எல்லாம் தரும் - அவ்வளவன்றி வினையது நன்மை அவன் வேண்டியன யாவற்றையும் கொடுக்கும். விளக்கம் ['வேண்டிய எல்லாம்' என்றது இம்மைக்கண் அறம், பொருள், இன்பம் முதலியவற்றையும், மறுமைக்கண் தான் விரும்பிய பதங்களையும். இதனான் காணப்படும் துணை நன்மையினும், கருதப்படும் வினை நன்மை சிறந்தது என வினைத்தூய்மையது சிறப்புக் கூறப்பட்டது.]
English explanation
The good external help confers is worldly gain;By action good men every needed gift obtain
The efficacy of support will yield (only) wealth; (but) the efficacy of action will yield all that is desired.