அதிகாரம் / Chapter 66

திருக்குறள் 652

என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடுநன்றி பயவா வினை.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

எல்லாக் காலமும் தவிர்தல் வேண்டும், புகழொடு நன்மை பயவாத வினையை. என்று மென்றது செயலற்ற காலமுமென்றது.

பரிமேலழகர்

புகழொடு நன்றி பயவா வினை - தம் அரசனுக்கு இம்மைக் கண் புகழும் மறுமைக்கண் அறமும் பயவாத வினைகளை; என்றும் ஒருவுதல் வேண்டும் - அமைச்சர்க்கு எக்காலத்தும் ஒழிதல் வேண்டும். விளக்கம் [பெருகல், சுருங்கல், இடைநிற்றல் என்னும் நிலைவேறுபாடு காலத்தான் வருதலின், 'என்றும்' என்றார். 'வேண்டும்' என்பது ஈண்டு இன்றியமையாது என்னும் பொருட்டு.]

English explanation

From action evermore thyself restrainOf glory and of good that yields no gain

Ministers should at all times avoid acts which, in addition to fame, yield no benefit (for the future).