அதிகாரம் / Chapter 65
திருக்குறள் 649
பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்றசிலசொல்லல் தேற்றா தவர்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
பல சொற்களைச் சொல்லக் காதலியா நிற்பர், குற்றமற்ற சில சொற்களைத் தெளியச் சொல்லலை அறியமாட்டாதார். மன்ற - தெளிய. இது சுருங்கச் சொல்லல் வேண்டு மென்றது.
பரிமேலழகர்
மாசு அற்ற சில சொல்லல் தேற்றாதவர் - குற்றமற்றன வாய்ச் சிலவாய வார்த்தைகளை அவ்வாற்றால் சொல்லுதலை அறியாதார்; பல சொல்லக் காமுறுவர் - பலவாய வார்த்தைகளைத் தொடுத்துச் சொல்ல விரும்புவர். விளக்கம் [குற்றம் மேல் சொல்லிய குணங்கட்கு மறுதலையாயின. இடைவிடாது பல சொல்லுதலையும் சொல்வன்மை என்று விரும்புவாரும் உளர். இவர் இவ்வாறு சொல்ல மாட்டாதாரே வல்லார் அது செய்யாரென யாப்புறுப்பார், 'மன்ற' என்றார்.]
English explanation
Who have not skill ten faultless words to utter plain,Their tongues will itch with thousand words man's ears to pain
They will desire to utter many words, who do not know how to speak a few faultless ones.