அதிகாரம் / Chapter 80

திருக்குறள் 794

குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

மேற்கூறியவற்றுள் உயர்குடிப்பிறந்து தன்மாட்டுப் பிறர் சொல்லும் பழிக்கு அஞ்சுமவனை அவன் வேண்டிய தொன்று கொடுத்தும் நட்பாகக் கொள்ளல் வேண்டும்.

பரிமேலழகர்

குடிப்பிறந்து தன்கண் பழி நாணுவானை - உயர்ந்த குடியின் கண் பிறந்த தன்மாட்டு உலகர் சொல்லும் பழிக்கஞ்சுவானை; கொடுத்தும் நட்புக் கொளல் வேண்டும் - சில கொடுத்தாயினும் நட்புக் கோடல் சிறந்தது. விளக்கம் (குடிப்பிறப்பால் தான் பிழை செய்யாமையும், பழியை அஞ்சலான் பிழைத்தன பொறுத்தலும் பெற்றாம்; இவை இரண்டும் உடையானைப் பெறுதல் அருமையின், அவன் நட்பை விலை கொடுத்தும் கொள்க என்பதாம்.)

English explanation

Who, born of noble race, from guilt would shrink with shame,Pay any price so you as friend that man may claim

The friendship of one who belongs to a (good) family and is afraid of (being charged with) guilt, is worth even purchasing.