அதிகாரம் / Chapter 6

திருக்குறள் 52

மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கைஎனைமாட்சித் தாயினும் இல்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

குடிக்குத்தக்க வொழுக்கம் மனையாள்மாட்டு இல்லையாகில், அவ்வில்வாழ்க்கை எத்துணை நன்மைகளை யுடைத்தாயினும் ஒரு நன்மையும் இன்றாம்.

பரிமேலழகர்

மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின்-மனையறத்திற்குத்தக்க நற்குண நற்செய்கைகள் ஒருவன் இல்லாளிடத்து இல்லையாயின்; வாழ்க்கை எனைமாட்சித்து ஆயினும் இல்-அல்வில்வாழ்க்கை செல்வத்தான் எத்துணை மாட்சிமையுடைத்தாயினும் அஃது உடைத்தன்று. விளக்கம் (இல்' என்றார் பயன்படாமையின்.)

English explanation

If household excellence be wanting in the wife,Howe'er with splendour lived, all worthless is the life

If the wife be devoid of domestic excellence, whatever (other) greatness be possessed, the conjugal state, is nothing.