அதிகாரம் / Chapter 97

திருக்குறள் 964

தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்நிலையின் இழிந்தக் கடை.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

தலையினின்று இறங்கிய மயிரைப்போல இகழப்படுவர்: மாந்தர் தமது நிலையினின்று நீங்கித் தாழ ஒழுகின விடத்து.

பரிமேலழகர்

மாந்தர் - குடிப்பிறந்த மாந்தர்; நிலையின் இழிந்தக்கடை - தம் உயர்ந்த நிலையைவிட்டு அதனினின்றும் தாழ்ந்த வழி; தலையின் இழிந்த மயிர அனையர் - தலையை விட்டு அதனின்றும் வீழ்ந்த மயிரினை ஒப்பர். விளக்கம் (அந்நிலையை விடாது நின்றவழிப் பேணப்படுதலும், விட்டுத் தாழ்ந்த வழி இழிக்கப்படுதலும் உவமையாற் பெற்றாம்.)

English explanation

Like hairs from off the head that fall to earth,When fall'n from high estate are men of noble birth

They who have fallen from their (high) position are like the hair which has fallen from the head.