அதிகாரம் / Chapter 97
திருக்குறள் 963
பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறியசுருக்கத்து வேண்டும் உயர்வு.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
செல்வம் பெருகிய காலத்து எல்லார்க்கும் பணிதல் வேண்டும்: செல்வம் மிகவுஞ் சுருங்கின் காலத்துத் தமது தன்மை குறைவுபடாமல் ஒழுகல் வேண்டும்.
பரிமேலழகர்
விளக்கம் (பணியாமை தாழ்வு வாராமற் பழைய உயர்ச்சிக்கண்ணே நிற்றல். செல்வக்காலை அஃது உயர்ச்சி செய்யத் தாம் தாழ்தலும், அல்லற்காலை அது தாழ்வுசெய்யத் தாம் உயர்தலும் வேண்டும என்பதாம். இவை மூன்று பாட்டானும் தாம் தாழ்தற்கு ஏதுவாயின செய்யாமை சிறப்புக் கூறப்பட்டது.)
English explanation
Bow down thy soul, with increase blest, in happy hour;Lift up thy heart, when stript of all by fortune's power
In great prosperity humility is becoming; dignity, in great adversity.