அதிகாரம் / Chapter 97
திருக்குறள் 962
சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடுபேராண்மை வேண்டு பவர்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
தமக்குப் பொருள் மிகுதி உண்டாமாயினும் நிகரல்லாதன செய்யார், தலைமையோடே கூடப் பெரிய ஆண்மையை விரும்புவார்.
பரிமேலழகர்
சீரினும் சீர் அல்ல செய்யார் - புகழ் செய்யுமிடத்தும் தம் குடிமைக்கு ஒவ்வாத இளிவரவுகளைச் செய்யார்; சீரொடு பேராண்மை வேண்டுபவர் - புகழுடனே மானத்தை நிறுத்துதலை விரும்புவார். விளக்கம் (எவ்விடத்தும் நிலைகுலையாத திண்மையான் உளதாதல் பற்றிப் 'பேராண்மை' எனப்பட்டது. நிலையுடைய புகழின் பொருட்டாகவும் செய்யார் என்பதாம்.)
English explanation
Who seek with glory to combine honour's untarnished fame,Do no inglorious deeds, though men accord them glory's name
Those who desire (to maintain their) honour, will surely do nothing dishonourable, even for the sake of fame.