அதிகாரம் / Chapter 4

திருக்குறள் 39

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்புறத்த புகழும் இல.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

அறத்தால் வருவது யாதொன்று, அதுவே இன்பமும் புகழுமாம்; அதனாலன்றி வருவனவெல்லாந் துன்பமாம்; புகழுமிலவாம். இஃது எல்லாப் போக நுகர்ச்சியும் இதனானே வருமென்றது.

பரிமேலழகர்

அறத்தான் வருவதே இன்பம்-இல்லறத்தோடு பொருந்தி வருவதே இன்பம் ஆவது; மற்று எல்லாம் புறத்த-அதனோடு பொருந்தாது வருவன எல்லாம் இன்பம் ஆயினும் துன்பத்தினிடத்த; புகழும் இல-அதுவேயும் அன்றிப் புகழும் உடைய அல்ல. விளக்கம் (ஆன்' உருபு ஈண்டு உடனிகழ்ச்சிக்கண் வந்தது, "தூங்கு கையான் ஓங்கு நடைய" (புறநா.22) என்புழிப்போல. இன்பம்-காம நுகர்ச்சி; அஃது ஆமாறு காமத்துப்பாலின் முதற்கண் சொல்லுதும். இன்பத்தின் புறம் எனவே, துன்பம் ஆயிற்று. பாவத்தான் வரும் 'பிறனில் விழைவு' முதலாயின அக்கணத்துள் இன்பமாய்த் தோன்றும் ஆயினும், பின் துன்பமாய் விளைதலின், 'புறத்த' என்றார். அறத்தோடு வாராதன 'புகழும் இல' எனவே, வருவது புகழும் உடைத்து என்பது பெற்றாம். இதனான் அறம் செய்வாரே இம்மை இன்பமும் புகழும் எய்துவர் என்பது கூறப்பட்டது.

English explanation

What from virtue floweth, yieldeth dear delight;All else extern, is void of glory's light

Only that pleasure which flows from domestic virtue is pleasure; all else is not pleasure, and it is without praise.