அதிகாரம் / Chapter 4
திருக்குறள் 40
செயற்பால தோரும் அறனே ஒருவற்குஉயற்பால தோரும் பழி.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
ஒருவனுக்குச் செய்யும் பகுதியது அறமே, தப்பும் பகுதியது பழியே. மேல் அறஞ் செய்யப் பிறப்பறு மென்றார், அதனோடு பாவமுஞ் செய்யின் அறாதென்றற்கு இது கூறினார்.
பரிமேலழகர்
ஒருவற்குச் செயற்பாலது அறனே-ஒருவனுக்குச் செய்தற்பான்மையானது நல்வினையே; உயற்பாலது பழியே-ஒழிதற்பான்மையது தீவினையே. விளக்கம் ('ஓரும்' என்பன இரண்டும் அசைநிலை. தேற்றேகாரம் பின்னும் கூட்டப்பட்டது. பழிக்கப்படுவதனைப் 'பழி' என்றார். இதனான் செய்வதும் ஒழிவதும் நியமிக்கப்பட்டன.)
English explanation
'Virtue' sums the things that should be done;'Vice' sums the things that man should shun
That is virtue which each ought to do, and that is vice which each should shun.