அதிகாரம் / Chapter 51
திருக்குறள் 503
அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்இன்மை அரிதே வெளிறு.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
கற்றற்கரிய நூல்களைக் கற்றுக் குற்றமற்றார்மாட்டும் ஆராயுங்கால் குற்றமின்மை இல்லை.
பரிமேலழகர்
அரிய கற்று ஆசு அற்றார் கண்ணும்-கற்றற்கு அரிய நூல்களைக் கற்று மேற்சொல்லிய குற்றங்கள் அற்றார் மாட்டும்; தெரியுங்கால் வெளிறு இன்மை அரிது - நுண்ணிதாக ஆராயுமிடத்து வெண்மை இல்லாமை அரிது. விளக்கம் [வெண்மை: அறியாமை; அஃது அவர்மாட்டு உளதாவது, மனத்தது நிலையாமையான் ஒரோவழியாகலின், 'தெரியுங்கால்' என்றார். காட்சியளவையால் தெரிந்தால் அதுவும் இல்லாதாரே தெளியப்படுவர் என்பது குறிப்பெச்சம். 'இவ்வளவைகளான இக்குணமும் குற்றமும் தெரிந்து குணமுடையாரைத் தெளிக என்பது, இவை மூன்று பாட்டானும் கூறப்பட்டது.]
English explanation
Though deeply learned, unflecked by fault, 'tis rare to see,When closely scanned, a man from all unwisdom free
When even men, who have studied the most difficult works, and who are free from faults, are (carefully) examined, it is a rare thing to find them without ignorance.