அதிகாரம் / Chapter 51
திருக்குறள் 502
குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்நாணுடையான் சுட்டே தெளிவு.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
உயர்குடியிற் பிறந்து காமம் வெகுளி முதலான குற்றித்தினின்று நீங்கி, தனக்கு வரும் பழியை அறுக்கவல்ல நாணமுடையவன்கண்ணதே அரசனது தெளிவு. இதுவும் உடன்பாடென்று கொள்ளப்படுமென்றவாறு.
பரிமேலழகர்
குடிப்பிறந்து - உயர்ந்த குடியில் பிறந்து; குற்றத்தின் நீங்கி - குற்றங்களினின்று நீங்கி; வடுப்பரியும் நாண் உடையான் கட்டே தெளிவு - தமக்கு வடு வருங்கொல் என்று அஞ்சா நிற்கும் நாணுடையவன் கண்ணதே அரசனது தெளிவு. விளக்கம் [குற்றங்களாவன; மேல் அரசனுக்குச் சொல்லிய பகை ஆறும்; மடி, மறப்பு, பிழைப்பு என்ற இவை முதலாயவும் ஆம். நாண்; இழிதொழில்களில் மனம் செல்லாமை. இவை பெரும்பான்மையும் தக்கோர்வாய்க் கேட்டலாகிய ஆகம அளவையால் தெரிவன. இந்நான்கும் உடையவனையே தெளிக என்பதாம்.]
English explanation
Of noble race, of faultless worth, of generous prideThat shrinks from shame or stain; in him may king confide
(The king's) choice should (fall) on him, who is of good family, who is free from faults, and who has the modesty which fears the wounds (of sin).