அதிகாரம் / Chapter 54
திருக்குறள் 535
முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழைபின்னூறு இரங்கி விடும்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
தன்னாற் காக்கப்படும் துன்பங்களை அவை வருவதற்கு முன்னே அறிந்து காவாது மறந்திருந்தான், பின் வந்துற்றகாலத்துக் காக்கலாகாமையின் அப்பிழைப்பினை நினைந்திரங்கிவிடும்.
பரிமேலழகர்
முன்னுறக் காவாது இழுக்கியான் - தன்னால் காக்கப்படும் துன்பங்களை அவை வருவதற்கு முன்னே அறிந்து காவாது மறந்திருந்தான்; பின் ஊறு தன்பிழை இரங்கிவிடும் - பின் வந்துற்ற காலத்துக் காக்கல் ஆகாமையின் அப்பிழைப்பினை நினைத்து இரங்கிவிடும். விளக்கம் [காக்கப்படும் துன்பங்களாவன; சோர்வு பார்த்துப் பகைவர் செய்வன. 'ஊற்றின்கண்' என்புழி உருவும் சாரியையும் உடன் தொக்கன. உற்ற காலத்துக் காக்கல் ஆகாமையின், 'இரங்கிவிடும்' என்றார். இவை மூன்று பாட்டானும் பொச்சாப்பு உடையார்க்கு வரும் ஏதம் கூறப்பட்டது.]
English explanation
To him who nought foresees, recks not of anything,The after woe shall sure repentance bring
The thoughtless man, who provides not against the calamities that may happen, will afterwards repent for his fault.