அதிகாரம் / Chapter 49

திருக்குறள் 483

அருவினை யென்ப உளவோ கருவியான்காலம் அற஧ந்து செயின்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

அரிய வினையென்று சொல்லப்படுவன உளவோ? முடிக்கலாங் கருவியோடே கூடக் காலத்தை யறிந்து செய்ய வல்லாராயின்.

பரிமேலழகர்

அருவினை என்ப உளவோ-அரசரால் செய்தற்கு அரிய வினைகள் என்று சொல்லப்படுவன உளவோ; கருவியான் காலம் அறிது செயின் - அவற்றை முடித்தற்கு ஏற்ற கருவிகளுடனே செய்தற்கு ஆம் காலம் அறிந்து செய்வராயின் விளக்கம் [கருவிகளாவன: மூவகை ஆற்றலும் நால்வகை உபாயங்களுமாம். 'அவை உளவாய் வழியும் காலம் வேண்டும்' என்பது அறிவித்தற்குக் 'கருவியான்' என்றார். எல்லா வினையும் எளிதில் முடியும் என்பதாம்.]

English explanation

Can any work be hard in very fact,If men use fitting means in timely act

Is there anything difficult for him to do, who acts, with (the right) instruments at the right time ?