அதிகாரம் / Chapter 49
திருக்குறள் 484
ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்கருதி இடத்தாற் செயின்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
உலகமெல்லாம் பெறுதற்கு நினைத்தானாயினும் பெறலாம்: காலத்தைக் குறித்து இடனறிந்து செய்வனாயின். இஃது எல்லாப் பொருளையு மெய்துமென்றது.
பரிமேலழகர்
ஞாலம் கருதினும் கைகூடும் - ஒருவன் ஞாலம் முழுவதும் தானே ஆளக் கருதினானாயினும் அஃது அவன் கையகத்ததாம்; காலம் கருதி இடத்தான் செயின் - அதற்குச் செய்யும் வினையைக் காலம் அறிந்து இடத்தோடு பொருந்தச் செய்வானாயின். விளக்கம் ['இடத்தான்' என்பதற்கு, மேல் 'கருவியான்' என்பதற்கு உரைத்தாங்கு உரைக்க; கைகூடாதனவும் கைகூடும் என்பதாம். இவை மூன்று பாட்டானும் காலம் அறிதற் பயன் கூறப்பட்டது.]
English explanation
The pendant world's dominion may be won,In fitting time and place by action done
Though (a man) should meditate (the conquest of) the world, he may accomplish it if he acts in the right time, and at the right place.