அதிகாரம் / Chapter 64
திருக்குறள் 640
முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்திறப்பாடு இலாஅ தவர்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
அடைவுபட எண்ணியும் தம்மால் முடிவது இல்லாதவற்றையே செய்யா நிற்பர்; வினை செய்யுந் திறன் இல்லாதார். இஃது எண்ணவல்லாராய் வினை செய்ய மாட்டாரென்று கூறிற்று.
பரிமேலழகர்
முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர் - செய்யப்படும் வினைகளை முன் அடைவுபட எண்ணி வைத்தும், செய்யுங்கால் அவை முடிவிலவாகவே செய்யா நிற்பர்; திறப்பாடு இலாதவர் - முடித்தற்கு ஏற்றகூறுபாடு இல்லாதார். விளக்கம் (அக்கூறுபாடாவன; வந்த இடையூறுகட்கு ஏற்ற பரிகாரம் அறிந்து செய்தலும், தாம் திண்ணியராதலுமாம். பிழையாமல் எண்ண வல்லராய் வைத்தும் செய்தும் முடிக்கமாட்டாரும் உளர் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் அமைச்சருள் விடப்படுவாரது குற்றம் கூறப்பட்டது.)
English explanation
For gain of end desired just counsel nought availsTo minister, when tact in execution fails
Those ministers who are destitute of (executive) ability will fail to carry out their projects, although they may have contrived aright.