அதிகாரம் / Chapter 64

திருக்குறள் 639

பழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர்எழுபது கோடி உறும்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

குற்றப்பட எண்ணும் அமைச்சரில் எழுபது கோடி மடங்கு நல்லர், உட்பகையாய்த் தன் னருகிலிருப்பவர். இவை யிரண்டும் மந்திரிகளுள் விடப்படுவாரது இலக்கணங் கூறின.

பரிமேலழகர்

பக்கத்துள் பழுது எண்ணும் மந்திரியின்-பக்கத்திருந்து பிழைப்பு எண்ணும்அமைச்சன் ஒருவனில்; ஓரேழுபதுகோடி தெவ் உறும் - அரசனுக்கு எதிர் நிற்பார் ஓரேழுபதுகோடி பகைவர் உறுவர். விளக்கம் ('எழுபது கோடி' என்றது மிகப் பலவாய எண்ணிற்கு ஒன்று காட்டியவாறு. வெளிப்பட நிற்றலான் அவர் காக்கப்படுவர்; இவன் உட்பகையாய் நிற்றலாம் காக்கப்படான என்பதுபற்றி இவ்வாறு கூறினார். 'எழுபது கோடி மடங்கு நல்லர்' என்று உரைப்பாரும், 'எழுபது கூறுதல்' என்று பாடம் ஓதுவாரும் உளர்.)

English explanation

A minister who by king's side plots evil thingsWorse woes than countless foemen brings

Far better are seventy crores of enemies (for a king) than a minister at his side who intends (his) ruin.