அதிகாரம் / Chapter 60

திருக்குறள் 595

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்உள்ளத் தனையது உயர்வு.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

புகுந்த நீரின் அளவினது பூக்களது வளர்ச்சி; அதுபோல மாந்தரது உள்ளத்தின் அளவினது ஊக்கம். இஃது ஊக்கம் இதனானே உண்டாமென்றது.

பரிமேலழகர்

வெள்ளத்து அனைய மலர் நீட்டம்-நின்ற நீரின் அளவினவாம் நீர்ப்பூக்களின் தாளினது நீளங்கள்; மாந்தர்தம் உள்ளத்து அனையது உயர்வு-அது போல மக்கள்தம் ஊக்கத்தளவினதாம் அவர் உயர்ச்சி. விளக்கம் ('மலர்' ஆகுபெயர். நீர் மிக்க துணையும் மலர்த்தாள் நீளும் என்பதுபட 'வெள்ளத்து அனைய' என்றார். இவ்வுவமையாற்றலான் ஊக்கம் மிக்க துணையும் மக்கள் உயர்வர் என்பது பெறப்பட்டது. உயர்தல் - பொருள் படைகளான் மிகுதல்.)

English explanation

With rising flood the rising lotus flower its stem unwinds;The dignity of men is measured by their minds

The stalks of water-flowers are proportionate to the depth of water; so is men's greatness proportionate to their minds.