அதிகாரம் / Chapter 60

திருக்குறள் 594

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலாஊக்க முடையா னுழை.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

அசைவில்லாத ஊக்கமுடையான்மாட்டு ஆக்கம், தானே வழி கேட்டுச் செல்லும். நினைத்ததனாலே ஊக்கமுண்டாமோ- என்றார்க்கு இது கூறப்பட்டது.

பரிமேலழகர்

அசைவு இலா ஊக்கம் உடையான் உழை-அசைவில்லாத ஊக்கத்தை உடையான்மாட்டு; ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும்-பொருள் தானே வழி வினவிக்கொண்டு செல்லும். விளக்கம் (அசைவு இன்மை - இடுக்கண் முதலியவற்றான் தளராமை. வழி வினவிச் சென்று சார்வார் போலத் தானே சென்று சாரும் என்பார், 'அதர் வினாய்ச் செல்லும்' என்றார். எய்தி நின்ற பொருளினும் அதற்குக் காரணமாய ஊக்கம் சிறந்தது என்பது, இவை நான்கு பாட்டானும் கூறப்பட்டது.)

English explanation

The man of energy of soul inflexible,Good fortune seeks him out and comes a friend to dwell

Wealth will find its own way to the man of unfailing energy.