அதிகாரம் / Chapter 60

திருக்குறள் 593

ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்ஒருவந்தம் கைத்துடை யார்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

செல்வத்தை இழந்தோமென்று அலமரார்; உள்ள மிகுதியை ஒரு தலையாகத் தம்மாட்டுடையார். இது பொருட்கேடுவரினுந் தளராரென்றது.

பரிமேலழகர்

ஆக்கம் இழந்தேம் என்று அல்லாவார்-இழந்தவராயினும் யாம் கைப்பொருளை இழந்தோம் என்று அலமரார்; ஒரு வந்தம் ஊக்கம் கைத்து உடையார்-நிலைபெற்ற ஊக்கத்தைக் கைப்பொருளாக உடையார். விளக்கம் ('ஆக்கம்' ஆகுபெயர். ஒரு வந்தம் ஆய ஊக்கம் என்க. கைத்து - கையகத்தாய பொருள்: "கைத்துண்டாம் போழ்தே கரவாது அறம் செய்ம்மின்' (நாலடி 19) என்றார் பிறரும். அல்லாவாமைக்கு ஏது, வருகின்ற பாட்டால் கூறுப.)

English explanation

'Lost is our wealth,' they utter not this cry distressed,The men of firm concentred energy of soul possessed

They who are possessed of enduring energy will not trouble themselves, saying, "we have lost our property."