அதிகாரம் / Chapter 123
திருக்குறள் 1229
பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டுமாலை படர்தரும் போழ்து.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
என்மதி நிலைகலங்க மயக்கத்தை யுடைத்தாகிய மாலைக்காலம் வரும்பொழுது இப்பதியெல்லாம் மயங்கித் துன்பமுறாநிற்கும். மதி - மானம்.
பரிமேலழகர்
விளக்கம் ('மதி மருள' என்பது, 'மதி மருண்டு' எனத் திரிந்து நின்றது. கூற்றமாகக் கருதிக் கூறினாளாகலின் 'மாலை படர்தரும் போழ்து' என்றாள். 'யான் இறந்து படுவல்' என்பதாம். 'மாலை மயங்கி வரும் போழ்து என் மதி நிலைகலங்கி நோயும் உழக்கும்' என்று உரைப்பாரும் உளர்.)
English explanation
If evening's shades, that darken all my soul, extend;From this afflicted town will would of grief ascend
When night comes on confusing (everyone's) mind, the (whole) town will lose its sense and be plunged in sorrow.