அதிகாரம் / Chapter 123
திருக்குறள் 1228
அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்குழல்போலும் கொல்லும் படை.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
நெருப்பையொத்த இம்மாலைப் பொழுதிற்கு முன்பு தூதாகி வந்து இப்பொழுது கொல்லுதற்குப் படையுமாகி வரவல்லது ஆயன் ஊதுங்குழலோ?. இப்பொழுது வருத்துதலின் படை என்றாள்.
பரிமேலழகர்
இதுவும் அது. ஆயன் குழல் - முன்னெல்லாம் இனிதாய்ப் போந்த ஆயன் குழல்; அழல் போலும் மாலைக்குத் தூதாகி - இது பொழுது அழல்போலச் சுடுவதாய மாலைக்குத் தூதுமாய்; கொல்லும் படை - அது வந்து என்னைக் கொல்வுழிக் கொல்லும் படையும் ஆயிற்று. விளக்கம் (பின்னின்ற 'போலும்' என்பது உரையசை. முன்னரே வரவுணர்த்தலின் தூதாயிற்று; கோறற் கருவியாகலின் படையாயிற்று. 'தானே சுடவல்ல மாலை, இத்துணையும் பெற்றால் என் செய்யாது?' என்பதாம்.)
English explanation
The shepherd's pipe is like a murderous weapon, to my ear,For it proclaims the hour of ev'ning's fiery anguish near
The shepherd's flute now sounds as a fiery forerunner of night, and is become a weapon that slays (me).