அதிகாரம் / Chapter 123

திருக்குறள் 1227

காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகிமாலை மலரும்இந் நோய்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

இக்காம நோயாகிய பூ விடியற்காலத்தே அரும்பிப் பகற்பொழுதெல்லாம் முகிழ் முகிழ்த்து மாலைக்காலத்தே மலரா நின்றது.

பரிமேலழகர்

மாலைப் பொழுதின்கண் இனையையாதற்குக் காரணம் என்னை?' என்றாட்குச் சொல்லியது. இந்நோய் - இக்காம நோயாகிய பூ; காலை அரும்பி - காலைப் பொழுதின்கண் அரும்பி; பகல் எல்லாம் போது ஆகி - பகற்பொழுதெல்லாம் பேரரும்பாய் முதிர்ந்து, மாலை மலரும் - மாலைப் பொழுதின் கண் மலராநிற்கும். விளக்கம் (துயிலெழுந்த பொழுதாகலின் கனவின் கண் கூட்டம் நினைந்து ஆற்றுதல்பற்றி, 'காலை அரும்பி' என்றும், பின் பொழுது செலச்செல அது மறந்து பிரிவுள்ளி ஆற்றாளாதல் பற்றிப் 'பகலெல்லாம் போதாகி' என்றும், தத்தம் துணையை உள்ளி வந்து சேரும் விலங்குகளையும் மக்களையும் கண்டு, தான் அக்காலத்தின் நுகர்ந்த இன்பம் நினைந்து ஆற்றாமை மிகுதிபற்றி 'மாலை மலரும்' என்றும் கூறினாள். 'பூப்போல இந்நோய் காலவயத்ததாகா நின்றது,' என்பது உருவகத்தால் பெறப்பட்டது. ஏகதேச உருவகம்.)

English explanation

My grief at morn a bud, all day an opening flower,Full-blown expands in evening hour

This malady buds forth in the morning, expands all day long and blossoms in the evening.