அதிகாரம் / Chapter 123
திருக்குறள் 1230
பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலைமாயும்என் மாயா உயிர்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
பொருள் தேடுதலையே தமக்கு இயல்பாக உடையவரை நினைத்து மயங்கின மாலைப்பொழுதிலே எனது சாகமாட்டாத உயிர் மெலியாநின்றது. இது மாலையாலடர்ப்புண்ட தலைமகள் தலைமகன் அன்பும் அறனும் இலனென்று நினைத்துத் தன்னுள்ளே சொல்லியது.
பரிமேலழகர்
இதுவும் அது. மாயா என் உயிர் - காதலர் பிரிவைப் பொறுத்த இறந்துபடாதிருந்த என் உயிர்; பொருண்மாலையாளரை உள்ளி மருள் மாலை மாயும் - இன்று பொருளியல்பே தமக்கியல்பாக உடையவரை நினைந்து, இம்மயங்கும் மாலைக்கண்ணே இறந்துபடாநின்றது. விளக்கம் ('குறித்த பருவம் கழியவும், பொருள் முடிவு நோக்கி வாராமையின் சொல் வேறுபடாமையாகிய தம்மியல்பு ஒழிந்தவர் அப்பொருளியல்பே தம் இயல்பாயினார்; காலம் இதுவாயிற்று, இனி நீ சொல்கின்றவாற்றால் பயனில்லை,' என்பதாம்.)
English explanation
This darkening eve, my darkling soul must perish utterly;Remembering him who seeks for wealth, but seeks not me
My (hitherto) unextinguished life is now lost in this bewildering night at the thought of him who has the nature of wealth.