அதிகாரம் / Chapter 61

திருக்குறள் 609

குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்மடியாண்மை மாற்றக் கெடும்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

குடியை யாளுதலுடைமையின்கண் வந்த குற்றமானது ஒருவன் சோம்புடைமையைக் கெடுக்கக் கெடும். குற்றம்- குடிக்குவேண்டுவன செய்யாமையால் வருங்குற்றம்.

பரிமேலழகர்

ஒருவன் மடி ஆண்மை மாற்ற - ஒருவன் தன் மடியாளுந்தன்மையை ஒழிக்கவே; குடி ஆண்மையுள் வந்த குற்றம் கெடும் - அவன் குடியுள்ளும் ஆண்மையுள்ளும் வந்த குற்றங்கள் கெடும். விளக்கம் (மடியாளுந்தன்மை - மடியுடைமைக்கு ஏது வாய தாமத குணம். 'குடியாண்மை' என்பது உம்மைத் தொகை. 'அவற்றின் கண் வந்த குற்றம்' என்றது மடியான் அன்றி முன்னே பிற காரணங்களான் நிகழ்ந்தவற்றை. அவையும் மடியாண்மையை மாற்றி, முயற்சி உடையனாக நீங்கும் என்பதாம்.)

English explanation

Who changes slothful habits savesHimself from all that household rule depraves

When a man puts away idleness, the reproach which has come upon himself and his family will disappear.