அதிகாரம் / Chapter 61

திருக்குறள் 608

மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்குஅடிமை புகுத்தி விடும்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

குடிப்பிறந்தார்மாட்டே மடிமை தங்குமாயின் அது தன்பகைவர்க்கு அடிமையாக்கிவிடும். இது கீழ்ப்படுத்தலேயன்றி அடிமையும் ஆக்குமென்றது.

பரிமேலழகர்

மடி குடிமைக்கண் தங்கின் - மடியினது தன்மை குடிமையுடையான்கண்ணே தங்குமாயின்; தன் ஒன்னார்க்கு அடிமை புகுத்திவிடும் - அஃது அவனைத் தன் பகைவர்க்கு அடியனாம் தன்மையை அடைவித்துவிடும்; விளக்கம் (மடியினது தன்மை - காரியக் கேடு. குடிமை - குடி செய்தல் தன்மை, அஃது அதனை உடைய அரசன் மேற்றதல், 'தன் ஒன்னார்க்கு' என்றதனான் அறிக. அடியனாம் தன்மை - தாழ்ந்து நின்று ஏவல் கேட்டல்.)

English explanation

If sloth a dwelling find mid noble family,Bondsmen to them that hate them shall they be

If idleness take up its abode in a king of high birth, it will make him a slave of his enemies.