அதிகாரம் / Chapter 61
திருக்குறள் 607
இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்துமாண்ட உஞற்றி லவர்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
கழறுதலைச் செய்து பிறர் இகழ்ந்து சொல்லுஞ் சொல்லைக் கேட்பர், மடியைச் செய்து மாட்சிமைப்பட்ட முயற்சி யில்லாதார்.
பரிமேலழகர்
மடிந்து புரிந்து மாண்ட உஞற்று இலவர் - மடியை விரும்புதலான் மாண்ட முயற்சி இல்லாதார்; இடி புரிந்து எள்ளும் சொல் கேட்பர் - தம் நட்டார்முன் கழறுதலை மிகச் செய்து அதனால் பயன் காணாமையின், பின் இகழ்ந்து சொல்லும் சொல்லைக் கேட்பர். விளக்கம் ('இடி என்னும் முதல்நிலைத் தொழிற் பெயரான், 'நட்டார்' என்பது பெற்றாம். அவர் இகழ்ச்சி சொல்லவே, பிறர் இகழ்ச்சி சொல்லாமையே முடிந்தது. அவற்றிற்கெல்லாம் மாறு சொல்லும் ஆற்றல் இன்மையின், 'கேட்பர்' என்றார்.)
English explanation
Who hug their sloth, nor noble works attempt,Shall bear reproofs and words of just contempt
Those who through idleness, and do not engage themselves in dignified exertion, will subject themselves to rebukes and reproaches.