அதிகாரம் / Chapter 100
திருக்குறள் 998
நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்பண்பாற்றார் ஆதல் கடை.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
தம்மொடு நட்பினைச்செய்யாது பகைமையைச் செய்தொழுகுவார்மாட்டும் தாம் பண்புடையராய் ஒழுகாமை அறிவுடையார்க் கிழுக்காம்.
பரிமேலழகர்
நண்பு ஆற்றாராகி நயம் இல செய்வார்க்கும் - தம்மொடு நட்பினைச் செய்யாது பகைமையைச் செய்தொழுகுவார் மாட்டும்; பண்பு ஆற்றராதல் கடை - தாம் பண்புடையராய் ஒழுகாமை அறிவு உடையார்க்கு இழுக்காம். விளக்கம் (நயம் - ஈரம். சிறப்பு உம்மை அவர் பண்பாற்றாமைக் கிடனாதல் தோன்ற நின்றது. அதனைச் செய்யின், தாமும் அவர் தன்மையராவர் என்பார், 'கடை' என்றார்.)
English explanation
Though men with all unfriendly acts and wrongs assail,'Tis uttermost disgrace in 'courtesy' to fail
It is wrong (for the wise) not to exhibit (good) qualities even towards those who bearing no friendship (for them) do only what is hateful.