அதிகாரம் / Chapter 111
திருக்குறள் 1108
வீழும் இருவர்க்கு இனிதே வளியிடைபோழப் படாஅ முயக்கு.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
ஒத்த காதலுடையா ரிருவர்க்கும் இனிதாம்; காற்றால் இடை யறுக்கப்படாத முயக்கம். இது புணர்ச்சி விருப்பினால் கூறினமையால் புணர்ச்சி மகிழ்தலாயிற்று. இது குறிப்பினால் புகழ்ந்தது.
பரிமேலழகர்
'ஒத்த அன்புடைய நுமக்கு ஒரு பொழுதும் விடாத முயக்கமே இனியது' என வரைவுகடாய தோழிக்குச் சொல்லியது. விளக்கம் (நீ சொல்லுகின்ற தொக்கும்) வளி இடை போழப்படா முயக்கு - ஒரு பொழுதும் நெகிழாமையின் காற்றால் இடையறுக்கப்படாத முயக்கம்; வீழும் இருவர்க்கு இனிதே - ஒருவரையொருவர் விழைவார் இருவர்க்கும் இனிதே.. (முற்று உம்மை விகாரத்தால் தொக்கது. ஏகாரம் தேற்றத்தின்கண் வந்தது. 'ஈண்டு இருவர் இல்லை இன்மையான், இஃது ஒவ்வாது' என்பது கருத்து. களவிற் புணர்ச்சியை மகிழ்ந்து வரைவு உடன்படான் கூறியவாறு.)
English explanation
Sweet is the strict embrace of those whom fond affection binds,Where no dissevering breath of discord entrance finds
To ardent lovers sweet is the embrace that cannot be penetrated even by a breath of breeze.