அதிகாரம் / Chapter 111
திருக்குறள் 1109
ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்கூடியார் பெற்ற பயன்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
ஊடுதலும் ஊடல் தீர்தலும், பின்னைப் புணர்தலுமென்னுமிவை அன்பினாற் கூடினார் பெற்ற பயன். காமம் - அன்பு. புணர்தலெனினும் பேணுதலெனினும் ஒக்கும். ஊடற் குறிப்பு தோன்றநின்ற தலைமகளை ஊடல் தீர்த்துப் புணர்ந்த தலைமகன் அதனால் வந்த மகிழ்ச்சி கூறியது.
பரிமேலழகர்
விளக்கம் ('ஆடவர்க்குப் பிரிவு என்பது ஒன்று உளதாதல் மேலும், அதுதான் பரத்தையர் மாட்டாதலும். அதனையறிந்து மகளிர் ஊடி நிற்றலும், அவ்வூடலைத் தவறு செய்தவர் தாமே தம் தவறின்மை கூறி நீக்கலும், பின்னும் அவ்விருவரும் ஒத்த அன்பினராய்க் கூடலுமன்றே முன்வரைந்தெய்தினார் பெற்ற பயன். அப்பயன் இருதலைப் புள்ளிள் ஓருயிராய் உழுவலன்புடைய எமக்கு வேண்டா,' என, அவ்வரைந் தெய்தலை இகழ்ந்து கூறியவாறு.)
English explanation
The jealous variance, the healing of the strife, reunion gained:These are the fruits from wedded love obtained
Love quarrel, reconciliation and intercourse - these are the advantages reaped by those who marry for lust.