அதிகாரம் / Chapter 96
திருக்குறள் 956
சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்றகுலம்பற்றி வாழ்தும் என் பார்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
பொய்யைச் சார்ந்து அமைவில்லாதன செய்யார், குற்றமற்ற குலத்தைச் சார்ந்து உயிர்வாழ்வோ மென்று கருதுவார். இது சான்றாண்மை விடார் என்றது.
பரிமேலழகர்
மாசு அற்ற குலம் பற்றி வாழ்தும் என்பார் - வசையற்று வருகின்ற நம் குடிமரபினோடு ஒத்து வாழக் கடவேம் என்று கருதி அவ்வாறு வாழ்வோர்; சலம் பற்றிச் சால்பு இல செய்யார் - வறுமையுற்றவழியும், வஞ்சனையைப் பொருந்தி, அமைவிலவாய தொழில்களைச் செய்யார். விளக்கம் (அமைவின்மை: அம்மரபிற்கு ஏலாமை. இவை மூன்று பாட்டானும் அவர் வறுமையுற்ற வழியும் அவ்வியல்பின் வேறுபடார் என்பது கூறப்பட்டது.)
English explanation
Whose minds are set to live as fits their sire's unspotted fame,Stooping to low deceit, commit no deeds that gender shame
Those who seek to preserve the irreproachable honour of their families will not viciously do what is detrimental thereto.