அதிகாரம் / Chapter 96

திருக்குறள் 957

குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்மத஧க்கண் மறுப்போல் உயர்ந்து.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

உயர்குடிப் பிறந்தார்மாட்டுக் குற்றமுளதாயின், அது வானத்தின் மதியின்கணுள்ள மறுப்போல உயர்ந்து விளங்கும். ஆதலால் குற்றப்பட ஒழுகற்க. இது குற்றம் செய்தலைத் தவிர வேண்டுமென்றது.

பரிமேலழகர்

குடிப்பிறந்தார்கண் குற்றம் - உயர்ந்த குடியின்கண் பிறந்தார் மாட்டு உளதாம் குற்றம்; விசும்பின் மதிக்கண் மறுப்போல் உயர்ந்து விளங்கும் - தான் சிறியதேயாயினும் விசும்பின் கண் மதியிடத்து மறுப்போல ஓங்கித் தோன்றும. விளக்கம் (உயர்குடி முதலிய பொருள் வகை மூன்றற்கும் விசும்பு முதலிய உவமைவகை ஒத்துப் பால்மாறு பட்டது. குடியது உயர்ச்சியானும் மதி போன்ற அவர் நற்குணங்களோடு மாறாதலானும், உலகெங்கும் பரந்து வெளிப்படும் என்பதாம்.)

English explanation

The faults of men of noble race are seen by every eye,As spots on her bright orb that walks sublime the evening sky

The defects of the noble will be observed as clearly as the dark spots in the moon.