அதிகாரம் / Chapter 96

திருக்குறள் 955

வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடிபண்பில் தலைப்பிரிதல் இன்று.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

வழங்கும் பொருள் தம்மளவிற்குக் குன்றிச் சுருங்கியவிடத்தும், பழைய பண்பு வழுவாத குடிப்பிறந்தார் தமது இயல்பினின்றும் நீங்குத லிலர். இது பண்புடைமை விடாரென்றது.

பரிமேலழகர்

பழங்குடி - தொன்றுதொட்டு வருகின்ற குடியின்கண் பிறந்தார்; வழங்குவது உள்வீழ்ந்தக் கண்ணும் - தாம் கொடுக்கும் பொருள் பண்டையில் சுருங்கியவிடத்தும்; பண்பின் தலைப்பிரிதல் இன்று - தம் பண்புடைமையின் நீங்கார். விளக்கம் (தொன்று தொட்டு வருதல்) விளக்கம் ('சேர சோழ பாண்டியர்' என்றார்போலப் படைப்புக் காலந்தொடங்கி மேம்பட்டு வருதல். அவர்க்கு நல்குரவாவது, வழங்குவது உள் வீழ்வது ஆகலின், அதனையே கூறினார்.)

English explanation

Though stores for charity should fail within, the ancient raceWill never lose its old ancestral grace

Though their means fall off, those born in ancient families, will not lose their character (for liberality).