அதிகாரம் / Chapter 60
திருக்குறள் 591
உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்உடையது உடையரோ மற்று.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
ஒற்றரையுடைமை யென்று சொல்லப்படுவது ஊக்கமுடைமை: அஃதிலாதார் மற்றுடையதாகிய பொருளெல்லாம் உடையராகார்.
பரிமேலழகர்
உடையர் எனப்படுவது ஊக்கம்-ஒருவரை உடையர் என்று சொல்லச் சிறந்தது ஊக்கம்; அஃது இல்லார் மற்று உடையது உடையரோ- அவ்வூக்கம் இல்லாதார் வேறு உடையதாயினும் உடையராவரோ, ஆகார். விளக்கம் ('வேறு உடையது' என்றது, முன் எய்திநின்ற பொருளை. 'உம்'மை விகாரத்தால் தொக்கது. காக்கும் ஆற்றல் இலராகலின் அதுவும் இழப்பர் என்பதாம்.)
English explanation
'Tis energy gives men o'er that they own a true control;They nothing own who own not energy of soul
Energy makes out the man of property; as for those who are destitute of it, do they (really) possess what they possess ?