அதிகாரம் / Chapter 116
திருக்குறள் 1158
இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்இன்னாது இனியார்ப் பிரிவு.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
தமக்கு இனமில்லாதவூரின்கண் இருந்து வாழ்தல் இன்னாது: இனியாரைப் பிரிதல் அதனினும் இன்னாது. இது பிரிவுணர்த்திய தலைமகற்கு இவ்விரண்டு துன்பமும் எங்கட்குளவாமென்று பிரிவுடன்படாது தோழி கூறியது.
பரிமேலழகர்
மதுவும் அது. இனன் இல் ஊர் வாழ்தல் இன்னாது - மகளிர்க்குத் தம் குறிப்பு அறியும் தோழியர் இல்லாத வேற்றூரின்கண் வாழ்தல் இன்னாது; இனியார்ப் பிரிவு அதனினும் இன்னாது - அதன் மேலும் தன் காதலரைப் பிரிதல் அதனினும் இன்னாது. விளக்கம் (தலைவன் செலவினை அழுங்குவித்து வாராது உடன்பட்டு வந்தமை பற்றிப் புலக்கின்றாளாகலின், 'இனன் இல் ஊர்' என்றாள். உலகியல் கூறுவாள் போன்று தனக்கு அவ்விரண்டும் உண்மை கூறியவாறு.)
English explanation
'Tis sad to sojourn in the town where no kind kinsmen dwell;'Tis sadder still to bid a friend beloved farewell
Painful is it to live in a friendless town; but far more painful is it to part from one's lover.