அதிகாரம் / Chapter 116

திருக்குறள் 1159

தொடிற்சுடின் அல்லது காமநோய் போலவிடிற்சுடல் ஆற்றுமோ தீ.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

தீண்டினாற் சுடுமதல்லது காமநோய்போல, நீங்கினாற் சுடவற்றோ தீ. தலைமகன் பிரிந்துழித் தலைமகளாற்றாமை கண்டு தோழி கூறியது.

பரிமேலழகர்

'காமம் தீயே போன்று தான் நின்ற இடத்தைச் சுடுமாகலான் நீ ஆற்றல் வேண்டும்' என்ற தோழிக்குச் சொல்லியது. தீத்தொடின் சுடின் சுடலல்லது - தீத்தன்னைத் தொட்டாற் சுடுமாயின் சுடுதலல்லது; காமநோய் போல விடின் சுடல் ஆற்றுமோ - காமமாகிய நோய் போலத் தன்னை அகன்றால் தப்பாது சுடுதலை வற்றோ? மாட்டாது. விளக்கம் (சுடுமாயின் என்பது, மந்திர மருந்துகளான் தப்பிக்கப் படாதாயின் என்றவாறு. காமத்திற்கு அதுவும் இல்லை என்பாள், வாளா 'கடல்' என்றார். அகறல்: நுகராமை. 'சுடல்' என்பது முன்னும் கூட்டப்பட்டது. 'தீயினும் கொடியதனை யான் ஆற்றுமாறு என்னை?' என்பதாம்.)

English explanation

Fire burns the hands that touch; but smart of loveWill burn in hearts that far away remove

Fire burns when touched; but, like the sickness of love, can it also burn when removed ?