அதிகாரம் / Chapter 101

திருக்குறள் 1001

வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்செத்தான் செயக்கிடந்தது இல்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

இடம் நிறைந்த பெரும்பொருளை ஈட்டிவைத்தானொருவன் அதனை நுகரானாயின் செத்தான்; அவன் பின்பு செய்யக்கிடந்தது யாது மில்லை. இஃது ஈட்டினானாயினும் தானொருபயன் பெறானென்றது.

பரிமேலழகர்

விளக்கம் (வைத்தான்' என்பது முற்றெச்சம். உண்ணுதல். அதனான் ஐம்புலன்களையும் நுகர்தல். 'வாய் சான்ற பெரும் பொருளை வைத்தானொருவன் அதனையுண்ணாது செத்த வழி, அதன்கண் அவனாற் செம்யக் கிடந்ததோர் உரிமையில்லை யாகலான், வையாது பெற்றபொழுதே நுகர்க', என்று உரைப்பினும் அமையும். இதற்குச் 'செத்தான்' என்பது எச்சம். இதனால் ஈட்டியானுக்குப் பயன்படலின்மை கூறப்பட்டது.)

English explanation

Who fills his house with ample store, enjoying none,Is dead Nought with the useless heap is done

He who does not enjoy the immense riches he has heaped up in his house, is (to be reckoned as) dead, (for) there is nothing achieved (by him).