அதிகாரம் / Chapter 13

திருக்குறள் 127

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

எல்லாவற்றையும் அடக்கிலராயினும் நாவொன்றினையும் அடக்குக: அதனை அடக்காக்காற் சொற்சோர்வுபட்டுத் தாமே சோகிப்பா ராதலான். இது சோகத்தின்மாட்டே பிணிக்கப் படுவரென்பது.

பரிமேலழகர்

யாகாவாராயினும் நாகாக்க-தம்மால் காக்கப்படுவன எல்லாவற்றையும் காக்க மாட்டாராயினும் நாவொன்றனையும் காக்க; காவாக்கால் சொல் இழுக்குப்பட்டுச் சோகாப்பர்-அதனைக் காவாராயின் சொற்குற்றத்தின்கண் பட்டுத் தாமே துன்புறுவர். விளக்கம் ('யா' என்பது அஃறினைப் பன்மை வினாப் பெயர். அஃது ஈண்டு எஞ்சாமை உரை நின்றது. முற்று உம்மை விகாரத்தால் தொக்கது. சொற்குற்றம் - சொல்லின்கண் தோன்றும் குற்றம். 'அல்லாப்பர், செம்மாப்பர்' என்பன போலச் 'சோகாப்பர்' என்பது ஒரு சொல்.)

English explanation

Whate'er they fail to guard, o'er lips men guard should keep;If not, through fault of tongue, they bitter tears shall weep

Whatever besides you leave unguarded, guard your tongue; otherwise errors of speech and the consequent misery will ensue.